சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி விழா ஏப்.1 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 05:03
சிவகாசி:சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா , ஏப்., 1 இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.11 நாட்கள் நடக்கும் விழா நாட்களில், அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச் சியாக எட்டாம் நாள் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவர். அன்று அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்தல் நடைபெறும். 9ம் நாள் விழாவில் அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து, முடிக்காணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை, கயர்குத்து என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். 10ம் விழாவில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.