பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
01:04
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை காளியம்மன் கோவில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, கடந்த, 30ல் காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று மாலை, 3:00 மணிக்கு, தேர்த்திருவிழா நடந்தது. அதியமான்கோட்டை உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. வரும், 4ல் தேர் நிலை அடைதலும், 9ல் குதிரை வாகனத்தில் சுவாமி வலம் வருதல், பந்தகாசி நடக்கிறது. அன்றிரவு, 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, காளியம்மன் ஊர்வலம் நடக்கிறது.