விழுப்புரம்: விழுப்புரம் மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் சித்திரை பெருவிழா மற்றும் 11ம் ஆண்டு அலங்காரத் திருவிழா நடந்தது. விழுப்புரம், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் சித்திரை பெருவிழா மற்றும் 11ம் ஆண்டு அங்காரத் திருவிழா, கடந்த 10ம் தேதி காலை பந்தல்கால் நடுதல் மற்றும் காப்பும் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலின் சித்திரைப் பெருவிழா மற்றும் 11ம் ஆண்டு அலங்காரத் திருவிழாவை, எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கிவைத்தார்.இதில், வழுதரெட்டி வாசுதேவன், செந்தில்முருகன், மலர் லாரி உரிமையாளர் பெரியார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.