பதிவு செய்த நாள்
11
மே
2018
12:05
குன்னுார்:குன்னுாரில் செல்லாண்டியம்மன் கோவிலில், 42வது ஆண்டு திருவிழா நடந்தது. குன்னுார் ஓட்டுபட்டறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், 42வது ஆண்டு திருவிழா நடந்தது. கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், அம்மன் அழைப்பு, அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூச்சாற்று, அன்னபூரணி பூஜை, வசம்பள்ளம் விநாயகர் கோவிலில் இருந்து செல்லாண்டிம்மன் கோவில் வரை முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, கரகம் கங்கையில் சேர்த்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜாசாமி, கோவில் பூஜாரி ஜோதியம்மா மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.