திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேர் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2018 12:05
திருவாடானை:திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளி நாட்களிலும் சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.இக் கோயில் தேர் சிறிய தேராக இருந்தது. இத் தேரை பெரிய தேராக புதுப்பிக்க அக் கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான பணியை துவக்கினர்.தேவஸ்தான கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது: தேர் செய்யும் பணிகள் 50 சதவீதம்முடிந்து விட்டது. தேர் முழு வடிவம் பெற்றவுடன் விரைவில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும் என்றார்.