பதிவு செய்த நாள்
19
மே
2018
12:05
திருப்பாச்சூர் : திருப்பாச்சூர், பாசூரம்மன் கோவிலில், வரும், 29ம் தேதி, 5ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா துவங்குகிறது. திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது, பாசூரம்மன் கோவில். இங்கு, 5ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா வரும், 29ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள கங்கையம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் ஊற்றுதலும், இரவு, 7:00 மணிக்கு, கங்கையம்மன் மலர் அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறும். பின், மறுநாள், 30ம் தேதி, காலை, 8:00 மணிக்கு அங்காள அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 31ம் தேதி காலை, 9:00 மணிக்கு பொத்தாளி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதலும் நடைபெறும். அன்று மாலை, 6:00 மணிக்கு பாசூரம்மன் கரகம் வீதி உலாவும், காப்பு கட்டுதலும் நடைபெறும். ஜூன், 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கன்னியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், இரவு, 7:00 மணிக்கு கும்பம் இட்டு வழிபடுதலும், 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு படையல் வைத்து கரகம் வீடு வலம் வருதல் நடைபெறும். இதையடுத்து, 3ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, பாசூரம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், மாலை, 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும், 4ம் தேதி காப்பு களைதலுடன் ஜாத்திரை விழா நிறைவடைகிறது.