திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஆஞ்சநேயர் கோவில், ராமநவமி விழாவில்‚ நாட்டிய பள்ளி மாணவிகளின்‚ கலை நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார்‚ கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில்‚ சத் சங்கம் சார்பில்‚ 53ம் ஆண்டு ராமநவமி விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து வரும் 22ம் தேதி வரை நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக‚ நேற்று முன்தினம் இரவு 6:00 மணிக்கு‚ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்‚ அர்ச்சனை‚ மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு‚ திருவண்ணாமலை ஸ்ரீநிதி நாட்டியாலயா மாணவர்களின் சீதா கல்யாண நாட்டிய நாடகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் பட்டது.நேற்று காலை 10:00 மணிக்கு‚ சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம்‚ மாலை 6:00 மணிக்கு‚ திவ்யநாம பஜனை நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில்‚ சத்சங்க நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.