கிருஷ்ணராயபுரம்: மாயனூரில் மீன் விற்பனை நடக்கும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். மாயனூர் காவிரி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் முன்னிட்டு, இக்கோவிலுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கட்டளை தென்கரை வாய்க்கால் அருகே, வரிசையாக உள்ள மீன் கடைகளுக்கு வரும் மக்கள், செல்லாண்டியம்மன் கோவில் சாலையில், வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், கோவிலுக்கு செல்பவர்கள், போக்கு நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். மீன் விற்பனை மையம் அருகே நிற்கும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.