காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் பிள்ளைகளாக இருந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை பிள்ளையாக அடைய விரும்பி தவம் இருந்தனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு, ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியும், திருவோணமும் இணையும் நாளில் வாமன மூர்த்தியாக அவதரித்தார். இந்திரனின் தாய் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு ’உபேந்திரன்’ என பெயரிட்டனர். இதற்கு ’இந்திரனுக்கு பின் வந்தவன்’ அதாவது ’இந்திரனின் தம்பி’ என்பது பொருள்.