பதிவு செய்த நாள்
17
செப்
2018
02:09
சேலம்: ராஜகணபதி, ஆதிஅந்தம கணபதியாக காட்சியளித்தார். சேலம், தேர்வீதி, ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 13ல் தொடங்கியது. நான்காம் நாளான நேற்று (செப்., 16ல்)காலை, 6:00 மணி முதல், சிறப்பு பூஜை நடந்தது. பின், இளநீர், தயிர் போன்ற திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, ஆதிஅந்தம கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அருகம்புல், எருக்கமாலை வைத்து, சுவாமியை வழிபட்டனர்.