பதிவு செய்த நாள்
22
செப்
2018
02:09
சேலம்: முத்தங்கி அலங்காரத்தில், ராஜகணபதி காட்சியளித்தார். சேலம், தேர்வீதி, ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 13ல் தொடங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று (செப்., 21ல்)காலை முதல், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இளநீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், அருகம்புல், எருக்கமாலை வைத்து, சுவாமியை வழிபட்டனர்.