திருஇருதய தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2026 12:01
வால்பாறை: வால்பாறை நகரில் அமைந்துள்ள, திருஇருதய தேவாலய தேர்த்திருவிழாவையொட்டி, கொடியேற்றுவிழா நடந்தது. ஆலய பங்குதந்தையர்கள் ஜெகன்ஆண்டனி தலைமையில், அய்யர்பாடி புனித வனத்துசின்னப்பர் ஆலய பங்குதந்தை ஜெரால்டின் திருக்கொடியை ஏற்றினார்.
விழாவில், வரும் 16ம் தேதி வரை நாள் தோறும் கூட்டு பாடல் திருப்பலி, சிறப்பு நவநாள் வழிபாடு, ஆலயத்தை சுற்றி வேண்டுதல் திருப்பலி நடக்கிறது. 17ம் தேதி வால்பாறை வாழைத்தோட்டம் புனித ஜெபாஸ்தியார் ஆலயத்தில், தாராபுரம் புனித அலோசியஸ் ஆலய வட்டார முதன்மை பங்குதந்தை ஜார்ஜ்தனசேகர் தலைமையில், கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி, வீடுகளுக்கு புனித ஜெபஸ்தியார் அம்பு எடுத்து செல்லும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் துாய இருதய ஆண்டவர், புனித ஜெபாஸ்தியார், வேளாங்கண்ணிமாத சொரூபங்கள் தாங்கிய தேர்பவனி, வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. வரும், 18ம் தேதி வரை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.