உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயிலில் கண்காணிப்பு கேமரா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2018 03:09
உத்தமபாளையம்:உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணி செய்யப்படாமல் இருந்தது.
இங்குள்ள இளைஞர்கள் ஓம் நமோ நாராயணா பக்த சபை என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி, சமீபத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தனர். கோயிலில் சுவாமி விக்கிரகங்கள் இருப்பதால், பாதுகாப்பை பலப்படுத்த அறநிலையத்துறை முடிவுசெய்துள்ளது.
இதற்கென கோயில் வளாகத்தில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. அதன்பின் பாதுகாப்பிற்காக பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.