பதிவு செய்த நாள்
27
செப்
2018
12:09
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், 88 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்த மாதம், புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று 26ல், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:00 மணிக்கு முடிந்தது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், 250 ஊழியர்கள், காணிக்கை பணியில் ஈடுபட்டனர். அதில், 88 லட்சத்து, 3,081 ரூபாய், 202 கிராம் தங்கம், 389 கிராம் வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.