பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம், கோ பூஜை உட்பட நான்கு கால பூஜைகள் நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
தொடர்ந்து பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நிகழ்ச்சிக்குப் பின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து காளியம்மன், விநாயகர், மந்தையம்மன் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை சமுதாய தலைவர் நாகராஜ், உபதலைவர் காமாட்சி, செயலாளர் சொக்கர், நிர்வாகக் குழு நிர்வாகி முத்துராமன், பிச்சை மணி, முனியாண்டி உள்பட கிராம பொதுமக்கள் செய்திருந் தனர். பூஜை மற்றும் வேத மந்திரங்களை ரமணி அய்யர், ரவி சாஸ்திரி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.