Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்வர்ண கவுரீ விரத மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 3. ஸ்வர்ண கவுரீ விரத பூஜை
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
02:10

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷய த்வாரா, ஸ்ரீ பரமேச் ’வர ப்ரீதியர்த்தம், சு’பே சோ ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்புத்வீபே, பாரத வர்ஷே பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யவாஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யாம் ஸம்வத்ஸராணாம் மத்யே, ... நாம ஸம்வத்ஸரே, ... அயனே... ருதௌ, பாத்ரபத மாஸே, சுக்லபக்ஷே, த்ருதீயாயாம், சு’பதிதௌ, .... வாஸர யுக்தாயாம், .... நக்ஷத்ர யுக்தாயாம் ச ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் த்ருதீயாயாம் சு’பதிதௌ.

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேம ஸ்தைர்ய, தைர்ய, விஜய, ஆயுராரோக்யைச்’வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ, சதுர்வித பலபுருஷார்த்த ஸித்யர்த்தம், மம இஹஜந்மனி ஜன்ம ஜன்மாந்தரே ச, அக்ஷய ஸௌபாக்ய ப்ராப்தி, காமாயா: புத்ரபௌத்ராதி தனதான்யைச் ’வர்ய ப்ராப்த்யர்த்தம், ஸ்ரீ ஸ்வர்ணகௌரீ ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்வர்ண கௌரீ பூஜாமஹம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே (அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்.)

பஞ்சாங்கம் பார்க்கவும்

விக்னேச் ’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன .............. உபாஸ்மஹே (பக்கம் 33)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச் ’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை  கலச ’ பூஜை

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

ஹராந்விதாம் இந்துமுகீம் ஸர்வாபரண பூஷிதாம் விமலாங்கீம் விசா’ லாக்ஷீம் சிந்தயாமி ஸதாசி’வாம் ஸ்வர்ண கௌரீம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸர்வமங்கள மாங்கல்யே சி ’வே ஸர்வார்த்த ஸாதிகே ச ’ரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே தோரம் ஸ்தாபயாமி
(சரடைப் பூஜையில் வைக்கவும்.)

ஆவாஹனம்

தேவி தேவி ஸமாகச்ச ப்ரார்த்தயேஹம் ஜகன்மயே
இமாம் மயா க்ருதாம் பூஜாம் க்ருஹாண ஸுரஸத்தமே
ஸ்வர்ணகௌர்யை நம:, ஆவாஹயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

பவானி த்வம் மஹாதேவி ஸர்வ ஸௌபாக்யதாயினி
அனேகரத்ன ஸம்யுக்தம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்வர்ணகௌர்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸுசாரு சீ’தலம் திவ்யம் நாநாகந்த ஸுவாஸிதம்
பாத்யம் க்ருஹாண தேவேசி ’ மஹாதேவி நமோஸ்து தே
பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸ்ரீபார்வதி மஹாபாகே ச ’ங்கரப்ரிய பாமினி
அர்க்யம் க்ருஹாண கல்யாணி பர்த்தா ஸஹ பதிவ்ரதே
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்காதோயம் ஸமாநீதம் ஸுவர்ணகலச ’ஸ்த்திதம்
ஆசம்யதாம் மஹாபாகே ருத்ரேண ஸஹிதேநகே
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ததி மத்வாஜ்ய ஸம்யுக்தம் ச ’ர்க்கராக்ஷீர ஸம்யுதம்
மதுபர்க்கம் க்ருஹாணேதம் அர்ப்பயாமி சி’வப்ரியே
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

பய: க்ஷீர க்ருதைர்மிச் ’ரம் ச ’ர்க்கரா மது ஸம்யுதம்
பஞ்சாம்ருத ஸ்நாநமிதம் க்ருஹாண பரமேச் ’வரி
பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு பால் அல்லது பஞ்சாம்ருதம் தெளிக்கவும்)

கங்கா ஸரஸ்வதீ ரேவா காவேரீ யமுனாஜலை:
ஸ்நாபிதாஸி மயா தேவி ததா சா’ந்திம் குருஷ்வ மே
சு’த்தோதகஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு தீர்த்தம் எடுத்து தெளிக்கவும்)

பீதவஸ்த்ரத்வயம் தேவி துப்யம் தாஸ்யாமி பார்வதி
சந்த்ரமௌளிப்ரியே தேவி ஸதா மே வரதா பவ
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ரத்ன தாடங்க கேயூரஹார கங்கண மண்டிதே
பூஷணம் க்ருஹ்யதாம் தேவி நமஸ்தே ஹரவல்லபே
ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாபல ஸமன்விதம்
தத்தம் மங்களாஸூத்ரம் தே க்ருஹாண சி’வல்லபே
கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
(பஞ்சுத்திரியால் ஆன மாலை ஸமர்ப்பிக்கவும்)

யக்ஞோபவீதம் விமலம் ஸர்வதா சு’பகாரிணி
ஜகன்மாதர் நமஸ்தேஸ்து த்ராஹி மாம் பரமேச் ’வரி
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

கர்ப்பூர குங்குமைர் யுக்தம் ஹரித்ராதி ஸமன்விதம்
கஸ்துரிகா ஸமாயுக்தம் சந்தநம் ப்ரதிக்ருஹ்யதாம்
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா
ஸௌபாக்ய த்ரவ்ய ஸம்யுக்தம் க்ருஹாண பரமேச்’வரி
ஸௌபாக்ய த்ரவ்யம் ஸமர்ப்பயாமி
(காதோலை, கருகுமணி அணிவிக்கவும்)

சா’லேயாம்ச ’ சந்த்ர ஸங்காசா ’ந் ஹரித்ரா மிலிதாந்சு ’பாந்
அக்ஷதைச்’ சார்ச்சயே துப்யம் க்ருஹாண பரமேச்’வரி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ஜாஜீ புந்நாக மந்தார கேதகீ சம்பகானி ச
புஷ்பாணி தவ பூஜார்த்தம் அர்ப்பயாமி ஸதாசி’வே
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்தல்.)

ஓம் ஸ்வர்ணகௌர்யை    நம:    பாதௌ    பூஜயாமி (கால்)
ஓம் காத்யாயிந்யை    நம:    குல்பௌ    பூஜயாமி (கணுக்கால்)
ஓம் பத்ராயை        நம:    ஜானுநீ    பூஜயாமி (முட்டி)
ஓம் ஹைமவத்யை    நம:    ஊரூ    பூஜயாமி (தொடை)
ஓம் ஈச்’வர்யை        நம:    கடிம்    பூஜயாமி (இடுப்பு)
ஓம் சி’வப்ரியாயை    நம:    நாபிம்    பூஜயாமி (தொப்புள்)
ஓம் பவதாயை        நம:    குஹ்யம்    பூஜயாமி (மர்மம்)
ஓம் அபர்ணாயை    நம:    ஹ்ருதயம்    பூஜயாமி (மார்பு)
ஓம் பார்வத்யை        நம:    கண்ட்டம்    பூஜயாமி (கழுத்து)
ஓம் துர்காயை        நம:    ஸ்கந்தௌ    பூஜயாமி (தோள்)
ஓம் கௌர்யை        நம:    ஹஸ்தான்    பூஜயாமி (கைகள்)
ஓம் ம்ருடான்யை    நம:    நாஸிகாம்    பூஜயாமி (மூக்கு)
ஓம் சண்டிகாயை        நம:    நேத்ரே    பூஜயாமி (கண்கள்)
ஓம் கிரிஜாயை        நம:    லலாடம்    பூஜயாமி (நெற்றி)
ஓம் மேனகாத்மஜாயை    நம:    சி ’ர:    பூஜயாமி (தலை)
ஓம் ஸ்ரீ ஸ்வர்ணகௌர்யை நம: ஸர்வாணயங்கானி பூஜயாமி (முழுவதும்)

தோரக்ரந்தி பூஜை
(சரடுக்கு புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸ்வர்ணகௌர்யை    நம:    ப்ரதம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் மஹாகௌர்யை    நம:    த்விதீய க்ரந்திம்    பூஜயாமி
ஓம் காத்யாயின்யை    நம:    த்ருதீய க்ரந்திம்    பூஜயாமி
ஓம் கௌமார்யை    நம:    சதுர்த்த க்ரந்திம்    பூஜயாமி
ஓம் பத்ராயை        நம:    பஞ்சம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் விஷ்ணுஸோதர்யை    நம:    ஷஷ்டி க்ரந்திம்    பூஜயாமி
ஓம் மங்கள தேவதாயை    நம:    ஸப்தம க்ரந்திம்  பூஜயாமி
ஓம் ராகேந்துவதநாயை    நம:    அஷ்டம க்ரந்திம் பூஜயாமி
ஓம் சந்த்ரசே ’கரபத்னியை    நம:    நவம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் விச்’வேச்’வரப்ரியாயை    நம:    தச ’ம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் தாக்ஷாயண்யை    நம:    ஏகாதச ’க்ரந்திம்  பூஜயாமி
ஓம் க்ருஷ்ணவேண்யை    நம:    த்வாதச ’க்ரந்திம்  பூஜயாமி
ஓம் லோல லோசநாயை    நம:    த்ரயோதச ’க்ரந்திம் பூஜயாமி
ஓம் பவான்யை        நம:    சதுர்த்தச ’ க்ரந்திம் பூஜயாமி
ஓம் பஞ்சகாத்மஜாயை    நம:    பஞ்சதச ’க்ரந்திம்      பூஜயாமி
ஓம் ஸ்ரீஸ்வர்ணகௌர்யை    நம:    ஷோடச ’க்ரந்திம் பூஜயாமி

கவுர்யஷ்டோத்தரச ’த நாமாவளி:
(புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்தல்.)

ஓம்    கௌர்யை        நம:
ஓம்     கணேச ’ஜனன்யை    நம:
ஓம்    கிரிராஜ தநூபவாயை    நம:
ஓம்    குஹாம்பிகாயை        நம:
ஓம்    ஜகன்மாத்ரே        நம:
ஓம்    கங்காதரகுடும்பின்யை    நம:
ஓம்    வீரபத்ர ப்ரஸுவே    நம:
ஓம்    விச்’வ வ்யாபின்யை    நம:
ஓம்    விச் ’வ ரூபிண்யை    நம:
ஓம்    அஷ்டமூர்த்யாத் மிகாயை(10)    நம:
ஓம்    கஷ்டதாரித்ரியச ’மந்யை     நம:
ஓம்    சி’வாயை        நம:
ஓம்    சா’ம்பவ்யை        நம:
ஓம்     ச ’ங்கர்யை        நம:
ஓம்    பாலாயை        நம:
ஓம்    பவான்யை        நம:
ஓம்    பத்ரதாயின்யை        நம:
ஓம்    மாங்கல்யதாயின்யை    நம:
ஓம்    ஸர்வமங்களாயை    நம:
ஓம்    மஞ்ஜுபாஷிண்யை(20)    நம:
ஓம்    மஹேச் ’வர்யை        நம:
ஓம்    மஹாமாயாயை        நம:
ஓம்    மந்த்ராராத்யாயை    நம:
ஓம்    மஹா பாலாயை        நம:
ஓம்    ஹோமாத்ரிஜாயை    நம:
ஓம்    ஹேமவத்யை        நம:
ஓம்    பார்வத்யை        நம:
ஓம்    பாபநாசி ’ன்யை        நம:
ஓம்    நாராயணாம்ச ’ஜாயை    நம:
ஓம்    நித்யாயை (30)        நம:
ஓம்    நிரீசா ’யை        நம:
ஓம்    நிர்மலாயை        நம:
ஓம்    அம்பிகாயை        நம:
ஓம்    ம்ருடான்யை        நம:
ஓம்    முனிஸம்ஸேவ்யாயை    நம:
ஓம்    மாநிந்யை        நம:
ஓம்    மேனகாத்மஜாயை    நம:
ஓம்    குமார்யை        நம:
ஓம்    கன்யகாயை        நம:
ஓம்    துர்காயை (40)        நம:
ஓம்    கலிதோஷ நிஷூதின்யை    நம:
ஓம்    காத்யாயின்யை        நம:
ஓம்    க்ருபாபூர்ணாயை    நம:
ஓம்    கல்யாண்யை        நம:
ஓம்    கமலார்ச்சிதாயை        நம:
ஓம்    ஸத்யை        நம:
ஓம்    ஸர்வமய்யை        நம:
ஓம்    ஸரஸ்வத்யை        நம:
ஓம்    அமலாயை        நம:
ஓம்    அமர ஸம்ஸேவ்யாயை (50)    நம:
ஓம்    அன்னபூர்ணாயை    நம:
ஓம்    அம்ருதேச்’வர்யை    நம:
ஓம்    அகிலாகம ஸம்ஸ்துதாயை    நம:
ஓம்    ஸுகஸச்சித் ஸுதாரஸாயை    நம:
ஓம்    பால்யாராதித பூதிதாயை    நம:
ஓம்     பானுகோடி ஸமத்யுதயே    நம:
ஓம்    ஹிரண்மய்யை        நம:
ஓம்    பராயை        நம:
ஓம்    ஸூக்ஷ்மாயை        நம:
ஓம்     சீ’தாம்சு’க்ருத சே ’கராயை (60)    நம:
ஓம்    ஹரித்ராகுங்குமா ராத்யாயை    நம:
ஓம்    ஸார்வகால ஸுமங்கல்யை    நம:
ஓம்    ஸர்வபோகப்ரதாயை    நம:
ஓம்    ஸமாசி’காயை        நம:
ஓம்    வேதாந்த லக்ஷணாயை    நம:
ஓம்    கர்மப்ரஹ்ம மய்யை    நம:
ஓம்    காம கலநாயை        நம:
ஓம்    காங்க்ஷிதார்த்ததாயை    நம:
ஓம்    சந்த்ரார்க்காயித தாடங்காயை    நம:
ஓம்    சிதம்பர ச ’ரீரிண்யை(70)     நம:
ஓம்    ஸ்ரீசக்ரவாஸின்யை    நம:
ஓம்    தேவ்யை        நம:
ஓம்    காமேச்’ வரபத்ன்யை    நம:
ஓம்    கமலாயை        நம:
ஓம்    மாராரி ப்ரியார்த் தாங்க்யை    நம:
ஓம்    மார்க்கண்டேய வரப்ரதாயை    நம:
ஓம்    புத்ரபௌத்ர வரப்ரதாயை    நம:
ஓம்    புண்யாயை        நம:
ஓம்    புருஷார்த்த ப்ரதாயின்யை    நம:
ஓம்    ஸத்யதர்மரதாயை (80)    நம:
ஓம்    ஸர்வ ஸாக்ஷிண்யை    நம:
ஓம்    ச ’தசா’ங்கரூபிண்யை    நம:
ஓம்     ச்’யாமலாயை        நம:
ஓம்    பகளாயை        நம:
ஓம்    சண்ட்யை        நம:
ஓம்    மாத்ருகாயை        நம:
ஓம்    பகமாலின்யை        நம:
ஓம்    சூ’லிந்யை        நம:
ஓம்    விரஜாயை         நம:
ஓம்    ஸர்வாஹாயை (90)    நம:
ஓம்    ஸ்வதாயை        நம:
ஓம்    ப்ரத்யங்கிராம்பிகாயை    நம:
ஓம்    ஆர்யாயை        நம:
ஓம்    தாக்ஷாயிண்யை        நம:
ஓம்    தீக்ஷாயை        நம:
ஓம்    ஸர்வ வஸ்தூத்த மோத்தமாயை    நம:
ஓம்    சி’வாபிதாநாயை        நம:
ஓம்    ஸ்ரீவித்யாயை        நம:
ஓம்    ப்ரணவார்த்த ஸ்வரூபிண்யை    நம:
ஓம்    ஹ்ரீங்காராயை        நம:
ஓம்    நாதரூபாயை        நம:
ஓம்    த்ரிபுராயை        நம:
ஓம்    த்ரிகுணாம்பிகாயை    நம:
ஓம்    ஸுந்தர்யை        நம:
ஓம்    ஸ்வர்ணகௌர்யை    நம:
ஓம்    ஷோடசா’க்ஷர தேவதாயை    நம:
ஓம்    த்ரிபுர ஸுந்தர்யை    நம:
ஓம்    ஸ்ரீஸ்வர்ணகௌர்யை (108)    நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

தேவத்ரும ரஸோத்பூத: காலாகரு ஸமன்வித:
ஆக்ரீயதா மயம் தூப: பவானி க்ராண தர்ப்பய:
தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி, காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னிநா ஜ்யோதிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்
தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன
பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா
ஸத்யனே பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வயாநயா ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

அன்னம் சதுர்விதம் ஸ்வாது ரஸை: ஷட்பிஸ் ஸமன்விதம்
பக்ஷ்ய போஜ்ய ஸமாயுக்தம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்வர்ணகௌர்யை நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி

நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

கர்ப்பூரேலா லவங்காதி தாம்பூலதள ஸம்யுதம்
க்ரமுகாதிபலம் சைவ தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)

இதம் பலம் மயா தேவி ஸ்த்தாபிதம் பிரதஸ் தவ
தேன மே ஸபலாவாப்திர் பவேஜ் ஜந்மனி ஜந்மனி
பூர்ணபலம் ஸமர்ப்பயாமி
நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை ஸததம் நம:
நம: ப்ரக்ருத்யை பத்ராயை சிவாயை ஸததம் நம:
கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும்)

ஸ்வர்ணகௌரீயை நம: மந்த்ரபுஷ்பம்,
ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.
(புஷ்பம், அக்ஷதை போடவும்)

யானி கானி சா பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்’யந்தி ப்ரதக்ஷிணபதே பதே
நமஸ்தே கிரிஜே தேவி நமஸ்தே லோகநாயிகே
நமஸ்தே ஸர்வபாபக்னி ஸ்வர்ணகௌரி நமோஸ்துதே
ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்)

புத்ரான் தேஹி தனம் தேஹி ஸௌபாக்யம் தேஹி ஸுவ்ரதே
அந்யாம்ச்’ச ஸர்வகாமாம்ச்’ச தேஹி தேவி
நமோஸ்து தே (ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்)

சரடு கட்டிக்கொள்ளுதல்

பக்தப்ரியே மஹாதேவி ஸர்வைச்’வர்ய ப்ரதாயினி
ஸூத்ரம் தே தாரயிஷ்யாமி மமாபீஷ்டம்
ஸதா குரு (என்று சொல்லி சரடு கட்டிக்கொள்ளவும்)

அர்க்ய ப்ரதானம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

கங்காதி புண்யஸலிலை: நாநாகந்த ஸுவாஸிதை:
அர்க்யம் தாஸ்யாமி வரதே க்ருஹாணேச ’õங்க ஹாரிணி
ஸ்வர்ண கௌர்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம் இதமர்க்யம்
(உத்தரணியில் ஜலம் எடுத்து கிண்ணத்தில் 3 முறை விடவும்)

அனேன அர்க்யப்ரதானேன ஸ்வர்ணகௌரீ ப்ரீயதாம்
பகவதி ஸ்வர்ண கௌரீ ப்ரீயதாம்.

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

ஸ்வர்ண கௌரீஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதம் ஆஸனம் கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

பவான்யாச் ’ச மஹாதேவ்யா: வ்ரதஸம்பூர்த்தி ஹேதவே
ப்ரீதயே த்விஜவர்யாய வாயனம் ப்ரததாம்யஹம்

என்று சொல்லி, நிவேதன பொருட்களை தோசை, இட்லி, வடை, அப்பம் முதலியவைகளை புது முறத்தில் வைத்து குறைந்தது ஐந்து ஸுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும். பிராம்மணருக்கு தாம்பூல தக்ஷிணை அளிக்கவும். பிறகு சுவாஸினிப் பெண்களை பூஜித்து, பழம், தாம்பழம் ஸமர்ப்பிக்கவும்.

புனர்பூஜை/ யதாஸ்த்தானம்


மறுநாள் விநாயகசதுர்த்திக்கு புனர்பூஜை செய்யும் பொழுது ஸ்வர்ண கொளரிக்கும் சேர்த்து புனர்பூஜை செய்ய வேண்டும். தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, “ஸவர்ண கௌரீ தேவீம் யதா ஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’ பனார்த்தே க்ஷேமாய புனரா கமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக ஸ்வர்ண கவுரீயை நகர்த்தி வைக்கவும். பிறகு, விநாயகரை விஸர்ஜனம் செய்யும் பொழுது, ஸ்வர்ண கவுரீயின் மணலையும் ஆற்றிலோ, கிணற்றிலோ, ஸமுத்திரத்திலோ கரைத்து விடவேண்டும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 3. ஸ்வர்ண கவுரீ விரத பூஜை »
temple news
ஸ்வர்ண கவுரீ விரத மஹிமைஸூத பவுராணிகர் சொல்கிறார்: இந்த விரதத்தைப்பற்றி ஸ்கந்த பகவான், சிவபெருமானை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar