Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேங்கடேச பூஜை ப்ராணப்ரதிஷ்டை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 11. வேங்கடேச பூஜை
நிவேதன மந்த்ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ஸ்ரீச் ’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச் ’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே *.... நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, *... ருதௌ, *....மாஸே, *...பக்ஷே, *... சு’பதிதௌ, ஸ்த்திர வாஸரயுக்தாயாம், *... நக்ஷத்ர யுக்தாயாம் ச ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் சு ’பதிதௌ.

அஸ்மாகம் ஸகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச் ’வர்யாபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் புத்ர பௌத்ராபிவ்ருத்யர்த்தம், இஷ்டகாம்யார்த்த ஸித்த்யர்த்தம், மனோவாஞ்ச்சாபல ஸித்யர்த்தம் ஸமஸ்த துரிதோப சா’ந்த்யர்த்தம், குலதைவதா கருணாகடாக்ஷ ஸித்யர்த்தம் அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீவேங்கடேச் ’வர ஸ்வாமின: ப்ரீத்யர்த்தம், ஸ்ரீவேங்கடேச் ’வர பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும். பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

கரந்யாஸம்  அங்கந்யாஸம்

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

1. ‘ஓம்’ அங்குஷ்டாப்யாம் நம:
2. ‘நம: ’ தர்ஜநீப்யாம் நம:
3. ‘வேங்கடேசா ‘ய ’ மத்யமாப்யாம் நம:
4. ‘ஓம் ’ அநாமிகாப்யாம் நம:
5. ‘நம:’ கனிஷ்டிகாப்யாம் நம:
6. ‘வேங்கடேசா ‘ய ’
7. கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
8. ‘ஓம் ’ ஹ்ருதயாய நம:
9. ‘நம: ’ சிரஸே ஸ்வாஹா
10. ‘வேங்கடேசா ‘ய ’ சி ’காயை வஷட்
11. ‘ஓம் ’ கவசாய ஹும்
12. ‘நம: ’ நேத்ராப்யாம் வௌஷட்
14. ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:

த்யானம்

வந்தே சே ’ஷகிரீந்த்ரச் ’ருங்க
நிலயம் வந்தே ஸுரேந்த்ரார்ச்சிதம்
வந்தே ஸன்மதி ஸேவிதாங்க்ரி
யுகளம் வந்தே கரூடாஸநம்
வந்தே ரத்ன கிரீட குண்டலதரம் வந்தே க்ருபாம்போநிதிம்
வந்தே ஸ்ரீ அலமேலுமங்க ரமணம் வந்தே ஹரிம் வேங்கடம்

ஸஹஸ்ர சி’ரஸம் தேவம் ஸஹஸ்ராக்ஷம் ஜகன்மயம்
ஸஹஸ்ரபத மவ்யக்தம் வேங்கடாத்ரி ஸ்த்திதம் ஹரிம்

ஸர்வஸம்பத் ப்ரதாதாரம் ஸர்வபாப ப்ரணாச ’கம்
மம ஸௌபாக்ய ஸித்த்யர்த்த மத்ர த்யாயே ஜகத்ப்ரபும்
அஸ்மின் பிம்பே (தீபே) அலமேலுமங்கா ஸமேதம்
ஸ்ரீவேங்கடேச் ’வரம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஆவாஹனம்

ஏஹி ஸர்வ ஜகந்நாத ஸர்வ ஸௌபாக்ய தாயக
ஆகச்ச க்ருபயா தேவ மம பூஜாம் க்ருஹாண போ:
அஸ்மின் பிம்பே (தீபே) அலமேலுமங்கா ஸமேதம்
ஸ்ரீவேங்கடேச் ’வரம் ஆவாஹயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 11. வேங்கடேச பூஜை »

மகாத்மீயம் நவம்பர் 01,2018

பகவான் ஸ்ரீனிவாசன் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். குபேரனும் பகவானிடம், தங்களுக்கு ... மேலும்
 

வேங்கடேச பூஜை நவம்பர் 01,2018

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள் பொடி2. குங்குமம்3. சந்தனம்4. ... மேலும்
 

ப்ராணப்ரதிஷ்டை நவம்பர் 01,2018

ப்ராணப்ரதிஷ்டாப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar