சிதம்பரம்: சிதம்பரத்தில் சிவகாமசுந்தரி அம்மன் ஐப்பசி பூர மகோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது.
கோவிலில் ஐப்பசி பூர மகோற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சிவகாமசுந்தரி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைப்பெற்று மாலை வீதியுலா நடக்கிறது. 9ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் அம்மன், கோவில் நுாறுகால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சிவகாமசுந்தரி அம்மன் பட்டு வாங்கும் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்று புறப்பாடு செய்து நடராஜர் சன்னதி முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் நடராஜ பெருமான் பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை அம்மன் தபசு உற்சவமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.