பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
திருப்பூர்:மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 7ம் தேதி, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் பழனிசாமி அறிக்கை:வரும், 7ம் தேதி, மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற விலங்குகளை வெட்டவும், கடைகளில் மாமிசம் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம், அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும், இதை சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.