நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணியில் நவ.13 ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2018 12:11
நத்தம்:நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நவ.13 ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற நவ.8 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. திண்டுக்கல் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர். மறுநாள் முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி நடக்கிறது. நவ.10 ல் சிவ உபதேச திருக்காட்சி, நவ.11 ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி, நவ.12 ல் வேல்வாங்கும் காட்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.13 அன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. மறுநாள் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் கணபதிமுருகன் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.