பதிவு செய்த நாள்
07
நவ
2018
12:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஒரு வாரமாக மக்கள் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டினர்.தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் நேற்று விமரிசையாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், அருகில் வசிப்பவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.கோவில்களில் வழிபாடுபொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விநாயகப் பெருமான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தீபாவளி பண்டிகையை யொட்டி லட்சுமி குபேர பூஜை நடந்தது. ஒன்பது வகையான அபிேஷகமும், ஒன்பது வகை பூக்களால் அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து குபேர பூஜையும் நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு நடந்தது.