விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் அம்மன் கோவிலில் கேதாரகவுரி விரத நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மந்தக்கரை அருகே மழுகரம் ஏந்திய முத்து மாரியம்மன் தீபாவளி பண்டிகையையொட்டி, கேதார கவுரி விரத நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 4.00 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பெண்கள் விரதம் இருந்து கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், நோன்பு கயிறுகளை கலசத்தில் ஏந்தி, வழிபாடு செய்தனர். பின்னர் அந்த மங்கலப்பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று, பூஜித்து நோன்பு கயிறு கட்டிக்கொண்டனர்.