பதிவு செய்த நாள்
07
நவ
2018
01:11
மதுரை, மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் நவ.,8 ல் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அன்று காலை 9:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை. காலை 10:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு, நவ.,9 காலை 9:00 மணிக்கு காமதேனு வாகனம், நவ.,10 காலை 9:00 மணிக்கு யானை வாகனம், நவ.,11 காலை 9:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனம், நவ.,12 காலை 9:00 மணிக்கு சப்பரம் வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். நவ.,13 காலை 11:00 மணிக்கு குதிரை வாகனம், மாலை 4:35 மணிக்கு வேல் வாங்குதல், மாலை 5:40 மணிக்கு சூரசம்ஹாரம், மாலை 6:15 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம், தீபாராதனை, அவ்வைக்கு நாவற்கனி கொடுத்து அருள்பாலித்தல் நடக்கிறது. நவ.,14 காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம், காலை 11:30 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீராட்டு உற்ஸவம், மாலை 6:00 மணிக்கு தங்கரத உலா நடக்கிறது.
சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொடிமரம் இடப்புறத்தில் சுவாமியின் அலங்காரம் தத்ரூபமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.