பதிவு செய்த நாள்
07
நவ
2018
02:11
* நவ.3 ஐப்பசி 17: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, கோவில்பட்டி அம்மன் கோயில்களில் திருக்கல்யாணம்.
* நவ.4 ஐப்பசி 18: முகூர்த்த நாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருநெல்வேலி நெல்லையப்பர் யானைவாகனம், காந்திமதியம்மன் பூப்பல்லக்கு, ஆரோக்கிய குளியல், கண்ணுாறு கழிக்க நல்ல நாள்.
* நவ.5 ஐப்பசி 19: முகூர்த்த நாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மூலவருக்கு திருமஞ்சனம்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர் ஊஞ்சல் காட்சி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* நவ.6 ஐப்பசி 20: தீபாவளி, நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 – 5:30 மணி, யம தர்ப்பணம், கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி, மதுரை மீனாட்சியம்மன் வைரக் கீரிடம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடி அருளல், திருவனந்த புரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.
* நவ.7 ஐப்பசி 21: அமாவாசை விரதம், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், கேதார கவுரி விரதம், மெய்கண்ட நாயனார் குருபூஜை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம், வள்ளியூர் முருகன் கலைமான் கிடா வாகனம்.
* நவ.8 ஐப்பசி 22: கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், சிக்கல் சிங்காரவேலர் தங்க மஞ்சத்தில் புறப்பாடு, நாகை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதப்பெருமாள் அன்னவாகனம்.
* நவ.9 ஐப்பசி 23: முகூர்த்தநாள், சந்திர தரிசனம், பூசலார் நாயனார் குருபூஜை, சிக்கல் சிங்கார வேலர் ஆட்டுக்கிடா வாகனம், வள்ளியூர் முருகன் சிம்மாசனம், நாகை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதப் பெருமாள் சந்திர பிரபை வாகனம்.