காஞ்சிபுரத்தில், கார்த்திகை தீபம் திருவிழா அகல் விளக்குகள் விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2018 01:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கார்த்திகை தீப திருவிழாவிற்காக பல வடிவில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கார்த்திகை தீபம் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக பொது மக்கள் புதிய அகல் விளக்குகள் வாங்கி வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுவர். பல வகையான அகல் விளக்குகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.இது குறித்து, அகல் விளக்கு வியாபாரி, டி.ரமேஷ் கூறியதாவது:சாதாரண அகல் விளக்கு இங்கு கிடைக்கிறது. புதிய மாடல் அகல் விளக்குகளை மக்கள் விரும்பி கேட்கின்றனர். அதனால் தஞ்சாவூர் பகுதியில் இருந்து இந்த விளக்குகள் வாங்கி வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.சாதாரண விளக்கு ஐந்து, 10 ரூபாய், மாடல் விளக்குகள் மூன்று, 1 ரூபாய், வண்ணம் பூசப்பட்ட விளக்கு ஒன்று ஐந்து ரூபாய், பெரிய அகல் விளக்கு ஒன்று, 10 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது.