கார்த்திகை மாதம் சோமவாரம் மிகவும் சிறந்ததாகும். இந்நாட்களில் சிவன்கோயில்களில் 1008 அல்லது 108 சங்காபிஷேகங்கள் மாலையில் நடைபெறும். கார்த்திகை சோம வாரத்தில் விரதமிருந்து சிவதரிசனக் காட்சியைப் பார்த்து, சங்காபிஷேகம் கண்டு தரிசனம் செய்பவர்கள் மங்களம் யாவும் பெறுவார்கள். சோமவார விரத வழிமுறைகள் யாவும் கார்த்திகை விரதத்திற்குரிய வழிமுறைகளே ஆகும்.