* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. * ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். * விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும். * சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும். * எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். * வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். * விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும். * பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது. விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும். சித்திரை - தானிய வளம் . வைகாசி - செல்வச்செழிப்பு. ஆனி - திருமண பாக்கியம். ஆடி - ஆயுள்பலம். ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல் புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி ஐப்பசி - நோய் நீங்குதல் கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம். மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு. தை - எடுத்த செயல்களில் வெற்றி. மாசி - துன்பம் நீங்குதல். பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.