Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டும் மழையில் மலை உச்சிக்கு ... திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 203வது உழவாரப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 203வது உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

22 நவ
2018
06:11

தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற 25-11-2018, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணியளவில் பூந்தமல்லி மக்களிடையே

 திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடைசூழ.... திருக்கோயில்களின் தூய்மை -நலன் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருவீதிவுலா வருவதுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகளையும் நடுகிறது.


இந்த திருவீதிவுலா அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து நீதிபதிகள் அம்பிகா, குருலக்ஷ்மி ஆகியோரால் நந்திக்கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டு, வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நிறைவடைகிறது.  இதை தொடர்ந்து இந்த இறைபணிமன்றம் அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் திருக்குளத்தில்  தனது 203வது உழவாரப்பணியை செவ்வனே செய்கிறது.


தொடர்புக்கு:
 எஸ். கணேசன்  9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்

விழிப்புணர்வின் அவசியங்கள்:

* திருக்கோயில்தோறும் தூய்மையாக வைத்திருத்தல் (உழவாரப்பணி)
* திருக்கோயில்களை நமது இல்லமாக பாவித்து தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், திருக்கோயில் வளர்ச்சி, வருமானம் மூலமாக, பின்வரும் தேவைகளுக்கு வழி செய்தல்.
* திருக்குளம் பராமரிப்பு - திருக்குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல்
* திருக்கோயில்களில் சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல்.
* திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா செல்ல ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் சுவாமி திருத்தேர் செய்து பவனி வர ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் கோசாலை பாதுகாத்து தொடர்ந்து பராமரித்தல்.
* திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், தங்குமிடம், அன்னதான கூடம், கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு
* திருக்கோயில்தோறும் அப்பகுதிவாழ் சிறார்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு,
* திருக்கோயில்தோறும் ஆகம விதி பின்பற்றுதல், புராதானம் மாறாமல் காப்பது.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வலியுணர்த்தும் வகையில் அவர்களாகவே முன்வந்து திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதே மன்ற அடியார்களின் தலையாய கடமையாகும். விழிப்புணர்வு மூலம் உழவாரப் பணி செய்யும் திருக்கோயில்கள்தோறும் குறைந்தது 50 அடியார் பெருமக்களையாவது அத்திருக்கோயிலில் நிரந்தரமாக தொண்டு செய்வதற்கு உருவாக்குவதே.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar