கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம்சிவனின் அம்சமாகும். யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் சிவன். ஆனால், பக்தர்கள் மீது கொண்ட கருணையினால் தன்னை நெருப்பாக மாற்றிக் கொண்டு அருள்புரியும் நாள் திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, சிவனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணில்இருந்து தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப் பொய்கையில் குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபம் நம் வீட்டு சிறு அகல்களில் ஒளி வீசுகிறது.