Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அநியாயமாக சபிப்பவர்களிடமிருந்து ... சபரிமலை பூஜை நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அச்சம் என்பதில்லையே...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
04:11

காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்த அன்பர் ஒருவர், “என் மகன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். முக்கியமாக பள்ளிக்கூடத்தில் தேர்வு என்றால் அளவு கடந்த பயம். படித்த கேள்விக்கான விடை கூட அவனுக்கு மறந்துபோகிறது அவன் மனதில் தைரியம் உண்டாக என்ன செய்வதெனத் தெரியவில்லை!”  என வருந்தினார். காமாட்சி குங்குமப் பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து ஆசீர்வதித்த சுவாமிகள் பேசத் தொடங்கினார். “பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கள். அந்த ஸ்லோகத்தைப் படித்தால் மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும். இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். ராவணன் அணியிலிருந்த முக்கியமான வீரர்கள் போரில் தோற்றனர். அதைக் கண்கூடாகப் பார்த்தும் கூட ராமருக்குப் பணிய மறுத்தான் ராவணன். சிறையில் இருந்து சீதாதேவியை  விடுவிக்க சம்மதிக்கவில்லை. ஆக்ரோஷத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் ராமருக்கு மனதில் சோர்வு எழுந்தது. “ எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது! இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?” என கவலைப்பட்டார்.   அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் சூஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார்.

அவ்வளவு தான்...ராமரின் சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை  வதம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்” மகாசுவாமிகளின் வழிகாட்டுதல் கேட்ட அன்பரின் மனம் நெகிழ்ந்தது. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை  மகனை பாராயணம் செய்ய சொல்வதாக கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.  திருப்பூர் கிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar