* யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி கூட சுழன்றபடியே இருக்கிறது. உழைத்து வாழ்வதே உண்மையான சுகம். * உள்ளத்தில் இருக்கும் அன்பை கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் கேட்பாய். * உறுதிமிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம். * பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மனஅமைதியும் கெடும். * நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும். * மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள். * விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுளுக்குச் சமமாவான். * கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக்குள் காட்சியளிப்பதைக் காணலாம். * மனம், சொல், செயல் மூன்றும் ஒன்றுபடும் போது மனிதன் குற்றமற்ற தன்மை கொண்டவனாகி விடுவான். – உபதேசிக்கிறார் சாந்தானந்தர்