Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமனுக்கு ‘பன்னகாபரணன்’ திருநாமம் திரிசக்தி அம்மன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பத்ம சக்கரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
01:12

காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள சவுந்தர்யபுரத்தில் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தரும் பத்ம சக்கரம் இத்தலத்தின் விசேஷ அம்சமாகும். காண்பதற்கரிய பத்மசக்கர ரூபிணியாய் அம்புஜவல்லி தாயார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மத்தியில் மேருபர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஒரு கர்ணிகையும் அதையொட்டி இருவளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அஷ்டலக்ஷ்மிகளான ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, தனலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலெட்சுமி ஆகியோர் நித்யவாசம் புரிகின்றனர். அவர்களின் நடுவில் அன்னை அம்புஜவல்லி தாயார் அருள்புரிகிறார். ஸ்ரக்தரா விருத்தத்தைக் குறிக்கும் வகையில் 44 இதழ்களைக் கொண்ட இச்சக்கரம் 4 வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் 4 தீ ஜ்வாலைகளையும் அத்தீ ஜ்வாலைகளில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், வராஹர், கிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது. பத்ம சக்கரத்தை சேவிப்பதால் மகாலட்சுமியின் பரிபூரண அருள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், சந்தானப்ராப்தி, தன தான்ய அபிவிருத்தி, வித்யா அபிவிருத்தி, வியாபார ஏற்றங்கள் அனைத்தும் கிட்டும். கடன் தொல்லை, திருமணத்தடை அகலும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பத்ம சக்கரத்துக்கு பாலபிஷேகமும், அன்னதானமும் நடைபெறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar