பதிவு செய்த நாள்
03
மே
2024
11:05
திருப்பதி; ஏழுமலையானின் முக்கிய பிரசாதமான லட்டு, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதற்காக, நாள் ஒன்றுக்கு, இரண்டு முதல் மூன்று லட்சம் லட்டுகளை தேவஸ்தானம், திருப்பதியில் தயார் செய்கிறது. இதற்குதேவைப்படும், 3,300 டன்னிற்கு மேற்பட்ட நெய் கொள்முதல் செய்கிறது. திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்த படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 94.22 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 20.17 லட்சமாகும். உண்டியல் வருமானம் ரூ.101.63 கோடி என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.