சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; மே 5ம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2024 11:05
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மே 5 பிரதோஷமும், மே 7ல் அமாவாசை வழிபாடும் நடக்கிறது. இதனை முன்னிட்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மலைப்பகுதி வறண்டு காணப்படுவதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கடம் வெயில் காரணமாக பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடி தண்ணிர் எடுத்து செல்வது நல்லது.