குரும்பூரில் சிவராத்திரி அன்று அம்மனுக்கு வழிவிடும் அதிசய மரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2012 11:02
குரும்பூர் : குரும்பூரில் சிவராத்திரியன்று அம்மனுக்கு வழிவிடும் அதிசய மரம் உள்ளது. குரும்பூரில் உள்ள குளக்கரையில் ஒருமேனி பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் சிலையை பாதியளவு மறைத்து அரசமரம் உள்பிரகாரத்தில் உள்ளது. வெளியில் நின்று அம்மனை முழுமையாக பார்த்து தரிசிக்க முடியாது. ஆனால் சிவராத்திரியன்று மட்டும் வெளியில் இருந்து அம்மனை முழு உருவத்துடன் தரிசிக்கலாம். அதற்கு காரணம் மரமானது அதுவாக இடம் விட்டு நகர்ந்து நிற்கிறது. இந்த அற்புத காட்சியை பார்க்க பக்தர்கள் கூட்டம் சிவராத்திரியன்று (இன்று) நிரம்பி வழியும்.