சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (டிசம்., 22ல்) தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 12:12
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாளை 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஆருத்ரா உற்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி தினமும் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது, காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிறப்பு வாகனத்தில் நடராஜர் புறப்பாடு நடக்கிறது.
கடந்த 18ம் தேதி தெருவடைச்சானும்; நாளை 22ம் தேதி நடராஜர் ஆருத்ரா தேரோட்டம் நடக்கிறது. மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜ சபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து 23ம் தேதி காலை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி திருவாபரண அலங்காரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம். தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மதியம் 3:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.