கிறிஸ்துமஸ் அன்று பாரசீகத்தில் எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். சில எஜமானர்கள் தங்களின் அடிமைகளுக்கு அன்று முழுவதும் வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. பண்டைய காலத்தில் ஐரோப்பியர்கள் பேய், பிசாசுகளுக்கு அதிகம் பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் சீக்கிரம் உதிக்க வேண்டும் என்பதற்காக இப்பண்டிகையை கொண்டாடினர்.