பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
அரூர்: சுந்தர ஐயப்ப சுவாமிக்கு, 39ம் ஆண்டு விழா, அபி?ஷகம், நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் காமாட்சியம்மன் கோவிலில், அமைந்துள்ள சுந்தர ஐயப்ப சுவாமிக்கு, 39ம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு, கடைவீதி பிள்ளையார் கோவிலில் இருந்து, பஞ்ச தீர்த்த கலசம், பால் குடங்களுடன் ஊர்வலமும், 9:00 மணிக்கு, மகா சுதர்சன ஹோமம், அக்னி காரியம் ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பம்பை, சிலம்பாட்டம், வாணவேடிக்கையுடன், சுவாமி திருவீதி உலா நடந்தது.