பெரியவர்கள் தவறு செய்யும் போது, இளைஞர்கள் அதைப் பக்குவமாக தட்டிக் கேட்கலாம். பயம் தேவையில்லை. சிவபெருமானே பாடல் எழுதிய ஆசிரியர் எனத் தெரிந்தும் கூட அதை தட்டிக் கேட்ட நக்கீரர் அஞ்சவில்லை.
என்ற பாடலை தினமும் சொன்னால் பெரியவர்கள் செய்யும் தவறைக் கூடத் தட்டிக் கேட்கும் துணிச்சல் பிறக்கும். “பூக்களில் உள்ள தேனை தேர்ந்தெடுத்து உண்ணும் வண்டே! என் கேள்விக்கு பதிலளிக்காமல், நீ கண்ட உண்மையை மட்டும் சொல். நீ பறந்து பறந்து பலவித மலர்களில் அமர்ந்த போது, பெண்களின் கூந்தலை விட மணம் மிக்க மலர்களைக் கண்டாயா?” என்பது இதன் பொருள்.