Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் அகவல் பிறந்த கதை ரமணரின் பாதம் எது? சிரசு எது?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
04:01

திருப்பூரில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோயிலில் கிழக்கு நோக்கி அருளும் அம்பிகையின் மடியில் பாலகனாக அமர்ந்து அருள்புரிகிறார் விநாயகர். செங்கல்பட்டு அருகில் உள்ளது ஆனூர். இங்கு அமைந்திருக்கும் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறர் இந்தப் பிள்ளையார். தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை. 


நாகை மாவட்டத்தில் உள்ள நரிமணம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரை வணங்குபவர்கள், அவரின் தலையில் குட்டு வைத்து வழிபடுகிறார்கள்! மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுகளுக்குப் பக்கத்தில் தான்தோன்றி விநாயகர் அருள்பாலிக்கிறார். ஓரடி நீளமும், அரையடி உயரத்துடன் குட்டி யானை ஒன்று படுத்திருப்பது போன்று காணப்படுகிறார். இதுபோன்ற விநாயகரின் சுயம்பு திருமேனியை வேறெங்கும் காண்பதரிது. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் கருவறையில் மாப்பிள்ளைக் கோல அலங்காரத்துடன் இரண்டு பிள்ளையார்கள் அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில், ஸ்ரீஜூரஹர விநாயகரைத் தரிசிக்கலாம். கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும், அருளும் இவரை வழிபட்டால், பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சேலம் கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக விநாயகரைத் தரிசிக்கலாம். இரண்டு முகங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகவும், மற்ற மூன்று முகங்கள் பக்கவாட்டு திசைகளை நோக்கியும் அருள்கின்றன. கும்பகோணம் சக்ரபாணி திருக்கோயில் விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் கோயில் கொண்டிருக்கிறார் மிளகுப் பிள்ளையார், இவருடைய திருமேனியில் மிளகாய் அரைத்துத் தடவி அபிஷேகம் செய்தால், விரைவில் மழை பொழியும் என்பது நம்பிக்கை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar