கவிஞர் ஷெரிடனை இருவர் காண வந்தனர். அவர்கள் கவிஞரிடம் எங்களுக்குள் ஒரு விவாதம் அதற்கு நீங்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்றனர். என்ன விவாதம்? ஷெரிடன் நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான். இவன் போக்கிரி என்கிறான். இவற்றில் எது உண்மை? ஷெரிடன் அவர்கள் இருவரையும் தம் இரு பக்கமும் அணைத்துக் கொண்டு, இப்போது நான் இருவருக்கும் இடையில் இருக்கிறேன் என்றார்.