காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அசையும் கல் குதிரை வாகனம், சிற்பக் கலையில் ஓர் அதிசயமாகும். இது தனித் தனியாக மூன்று பாகங்களாகச் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதைச் செய்த சிற்பி, இதுபோல் இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும், பக்திக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இக்கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் இவர் பெயர் கொண்ட தெருவில் பெருமாள் எழுந்தருள்வாராம்!