பதிவு செய்த நாள்
11
ஜன
2019
04:01
சபரிமலை: சபரிமலையில், இளம் பெண்கள் தரிசனம் நடத்தியதற்கு எதிராக, எருமேலி பள்ளிவாசலுக்கு செல்ல வந்த, தமிழகத்தின், திருப்பூர், சுசீலாதேவி, 35, ரேவதி, 39, திருநெல்வேலி காந்திமதி, 51, ஆகிய மூவரும், பாலக்காட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிற்றுார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், எருமேலி ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் கூறியதாவது: பெண்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வருவது தவறு இல்லை. எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.