மத்தியப் பிரதேசம் டட்டியா மாவட்டத்தில் உள்ள யூனோவில், பாலாஜி சூரியக்கோயில் உள்ளது. இங்குள்ள சூரியனை பிரம்மண்யதேவ் என்கின்றனர். குஷ்டம், தோல் நோயில் இருந்து நிவாரணம் பெற சிறப்பு வழிபாடு நடக்கிறது. கருப்பு நிறத் தகடுகளால் மூடப்பட்ட செங்கல் மேடையில் சூரியன் சிலை உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜான்சி செல்லும் ரயிலில் சென்றால் டட்டியா அல்லது ஜான்சியில் இறங்கலாம். இங்கிருந்து 252 கி.மீ., தூரம் பஸ் அல்லது காரில் செல்லலாம். மொத்த தூரம் 2050 கி.மீ.,