Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் .. சிறந்த தர்மம் எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தண்டனையில் தப்ப முடியாது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

மன்னர் முகமது இக்பாலிடம் கொடூரமான பத்து வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள் இருக்கும் அவற்றை மன்னர் தன்னுடைய எதிரிகள், துரோகிகள், குற்றவாளிகளைக் கொல்ல பயன்படுத்தினார். அமைச்சர்களில் ஒருவர் அப்பாவி போல காட்டிக் கொண்டாலும், தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டார்.  பக்கத்து நாட்டு மன்னருக்கு உள்நாட்டு ரகசியங்களை தெரிவித்து ஆதாயம் தேடிக் கொண்டார்.  விஷயம் மன்னரின் கவனத்திற்கு வந்தது.  குற்றம் நிரூபிக்கப்படவே, நாய்களுக்கு இரையாக்க உத்தரவிட்டார். அமைச்சர் அழுதபடி, “மன்னா! பத்தாண்டுகள் உங்களுக்கு சேவை செய்ததற்கு இது தான் பலனா? தண்டனையளிக்கும் முன்  பத்து நாள் மட்டும் எனக்கு அவகாசம் கொடுங்கள். அவசர கடமைகளை முடித்து விட்டு வருகிறேன்.” மன்னர் அனுமதிக்க அமைச்சர் புறப்பட்டார். வேட்டை நாய்களைப் பராமரிக்கும் பணியாளரைச் சந்தித்தார். அவரது உதவியுடன் நாய்களுக்கு உணவு கொடுப்பது, பராமரிப்பது என பத்துநாளும் பொழுதைக் கழித்தார். பதினோராவது நாள் மன்னரைக் காண வந்தார் அமைச்சர். வேட்டை நாய்களின் கூண்டுக்குள் அமைச்சரை தள்ளி விட உத்தரவிட்டார் மன்னர்.  ஆனால், அவை அமைச்சரைக் கண்டதும் வாலாட்டியபடி நின்றன. இதையறிந்த மன்னர், “இது எப்படி சாத்தியம்?” எனக் கேட்டார்.  
“மன்னா! கடந்த பத்து நாளாக  நாய்களுடன் பழகி சேவை செய்தேன். நன்றியுணர்வு கொண்ட நாய்கள் என் மீது அன்பு காட்டும் போது, பத்தாண்டுகளாக நான் செய்த சேவையை மறந்து விட்டீர்களே! என் தவறுக்காக கொல்ல நினைக்கிறீர்களே... நியாயமா?” என்றார் அமைச்சர். அப்போது தான் மன்னருக்கு தான் செய்த தவறு புரிந்தது. பணியாளர்களின் பக்கம் திரும்பிய மன்னர், உடனே இவரை இழுத்துச் சென்று முதலைகள் இருக்கும் குளத்தில் வீசி எறியுங்கள் என உத்தரவிட்டார். தண்டனையில் இருந்த தப்பிக்க முயன்ற அமைச்சர் மீது கருணை காட்ட மன்னர் விரும்பவில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar