திருவள்ளூர் :மாசி அமாவாசையை முன்னிட்டு, வீரராகவ பெருமாள் கோவிலில், தெப்ப உற்சவம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். மாசி அமாவாசையான நேற்று முன்தினம், தெப்ப உற்சவம் நடந்தது.இதில், வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா, ராகவா ராகவா என பக்தி பரவசம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.