உலகம் படைக்கப்பட்ட நாள் தைப்பூசம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் இந்நாளில் தோன்றின. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிவபார்வதியை இந்நாளில் வழிபட்டனர். சக்தியின்றி சிவமில்லை, சிவமின்றி சக்தியில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில், சக்தியும், சிவனும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதும் தைப்பூசத்தன்று தான். முருகனால் அசுரர்கள் அழிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, பார்வதி முருகனுக்கு தன் சக்தியை திரட்டி, வேலை வழங்கியது இந்நாளில்தான். இதன் பின்பு இந்நாள் முருகனுக்குரியதாக மாறியது. மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளியை முருகன் திருத்தணியில் மணம் செய்தார்.