* உன்னை அறிந்தால் வாழ்வில் இன்பமே. * எல்லா உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள். * ஒழுக்கமே சொர்க்கத்தின் திறவுகோல். * பாவம் என்பது இன்பத்தில் தொடங்கி துன்பத்தில் முடியும். * எப்போதும் பொதுநோக்கத்துடன் செயலாற்றுங்கள். * தேவைக்கும் சற்று குறைவாகவே உண்ணுங்கள். * நல்லவர் மனம் நோகும் செயலில் ஈடுபடாதீர்கள். * நண்பர்களை ஒருபோதும் பிரிக்க முயலாதீர்கள். * ஆசை காட்டி மோசம் செய்வது பெரும் பாவம். * உதவும் மனம் கொண்டவனே உண்மையான மனிதன். * தவறைத் திருத்திக் கொள்பவனே நல்லவன். * பிறருடைய பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். * மனஒருமையுடன் கடவுளை வணங்குபவருடன் சேருங்கள். * உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரை விட்டு விலகுங்கள். * நல்ல எண்ணத்தால் மனதை கனியச் செய்யுங்கள். * கோள் சொல்லி பிறர் குடும்பத்தை பிரிக்க நினைக்காதீர்கள். * பிறரைக் குறை சொல்லாமல் இருந்தால் நம்மிடம் குற்றம் உண்டாகாது. * இயற்கையை மாற்றும் தெய்வீக சக்தி நம்முள் இருக்கிறது * உத்தமர்களுடன் விரும்பி நட்பு பாராட்டி மகிழுங்கள். * காலம் ஒவ்வொரு நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை பயனுள்ளதாக்குங்கள். * உலகம் நலம் பெற தினமும் வழிபாடு செய்யுங்கள். * நம் தெய்வம் பெற்றோரே. * கொலை, சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்குங்கள். * மெதுவாக பேசுங்கள், அது ரகசியங்களை காக்கும். உண்மையைப் * பேசுங்கள், அது வார்த்தைகளை பாதுகாக்கும். வழிகாட்டுகிறார் வள்ளலார்