* உற்றார் உறவினர் கூட கைவிடக் கூடும். ஆனால் தானம், தர்மம் எப்போதும் கூட வரும். * நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சி வேளை நிழல் போல சுருங்கி விடும். * எளிமையாக வாழ்ந்தால் மன நிம்மதியுடன் வாழலாம். * புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும். * நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். * நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள். * ஆடம்பரமோ, அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். * எந்தச் செயலில் ஈடுபட்டாலும் சுயநலத்துடன் செய்யக் கூடாது. பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும். * லட்சம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டியது போல மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும். * உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க பிரார்த்தனை அவசியமானது. உற்சாகமூட்டுகிறார் சிவானந்தர்