Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை துவார பாலகர்கள் ஒரு விளக்கம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

விடியலில்  விஷ்ணு, மாலையில்  மகேஸ்வரன்,  என்பது   பரமாசார்யாளே சொன்ன வாக்கு. அதாவது  தூங்கி எழுந்ததும் நீராடிவிட்டு, பெருமாளைத்  துதிக்கவேண்டும்.  சாயங்கால  நேரத்தில் சிவபெருமானை, ஆராதிக்க  வேண்டும் என்று ஒரு வழிமுறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

 அதிகாலை  நேரம் என்பது, சூரியனின்  வெப்பம் பரவ ஆரம்பிக்காத குளிர்ச்சியான நேரம். அந்த  சமயத்தில் குளிர்ச்சியால் பரவும் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, துளசியே  மருந்து.  அதனால்தான்  அதனை வழிபாட்டோடு கலந்து, துளசியை  பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு,  துளசி  தீர்த்தத்தையோ, ஓரிரு  துளசி தளங்களையோ எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

புராணங்கள், பெருமாள்  குளுமையான பாற்கடலில் வசிப்பதால் அவருக்கு வெப்பத்தை உண்டு பண்ணும் துளசியால் அர்ச்சிக்க வேண்டும் என்கிறது.  மாலை  நேரம் எங்கும் வெம்மை தகித்துவிட்டு, மீண்டும்  குளுமை பரவத் தொடங்கும் நேரம்.  அந்த  சமயத்தில் குளிர்ச்சியை உண்டுபண்ணும் வில்வம் கலந்த தீர்த்தத்தை அல்லது ஓரிரு வில்வதளத்தினை சிறிது உட்கொள்வது, அந்த  சமயத்தில் பரவும் குளுமையால் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகளில் இருந்து காத்துக் கொள்ள உதவும்.

அதனால்தான்  மாலை நேர வழிபாட்டை மகேசனுக்கு உரியதாகச் சொல்லி, அதில்  வில்வத்தை இடம்பெறச் செய்திருக்கிறார்கள், நம்  முன்னோர். தத்துவ  ரீதியாகச் சொன்னால், விடியலை  உற்பத்தி எனும் தொடக்கமாகவும், இரவினை  ஊழியாகிய முடிவாகவும் சொல்வது உண்டு. அதோடு  விழித்து எழுவதை பிறப்புக்கும், தூக்கத்தை  இறப்புக்கும், சமம்  என்றும் சொல்வார்கள்.  ஒவ்வொருநாளும்  தூங்கி எழுவது பிறவிக்கு சமம் என்பதால், காத்தல்  செயலைச் செய்யும் திருமாலுக்கு முதல் வழிபாடு  உறக்கம் இறைவனோடு ஒடுங்குவதற்கு ஒப்பானது என்பதால், தன்னோடு  ஒடுக்கி உறக்கத்தில் ஆழ்த்தும் ஈசனுக்கு, மாலை  ஆராதனை.

இன்றைய  விஞ்ஞானம், பகல்  நேரத்தில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்களில் இருந்து தப்பிக்க, துளசியில்  இருந்து வெளிப்படும் ஆக்ஸிஜன் உதவுவதாகவும், இரவு  நேரத்தில் பரவக்கூடிய நோய்க் கிருமிகளில் இருந்து வில்வம் பாதுகாப்பு அளிப்பதாகவும் கண்டுபிடித்துச் சொல்கிறது.  இவை  அனைத்தையும் அன்றே அறிந்துதான் தெய்வத்தை வழிபாட்டோடு நம் வளமாக வாழவும் வழி செய்து வைத்திருக்கிறார்கள் முன்னோர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar